விஜய் நிராகரித்த கதை.. ஹிட் ஆக்குகிறேன் பாரு என எடுத்த சுந்தர்.சி! - படுதோல்வி ஆன படம்
நடிகர் விஜய் ஒரு படத்தை கமிட் செய்யும் முன்பு பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்பது வழக்கம். அதில் யார் கதை திருப்தியாக இருக்கிறாதோ, அவர் இயக்கத்தில் அடுத்து நடிப்பார்.
அப்படி அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி ஒரு கதையை சொன்னாராம். அப்போது என்ன நடந்தது என தற்போது ஒரு பேட்டியில் அவர் பேசி இருக்கிறார்.
ஊத்திக்கிச்சு
சில வருடங்களுக்கு முன்பு விஜய்க்கு ஒரு கதை சொன்னேன். முதல் பாதி அவருக்கு பிடித்து இருந்தது. இரண்டாம் பாதி பிடிக்கவில்லை.
அவர் நிராகரித்த கதையை நான் படம் எடுத்து ஹிட் ஆக்கி காட்டுகிறேன் என எடுத்தேன். அந்த படம் ஊத்திகொண்டது.
"அது எந்த படம் என செல்ல விரும்பவில்லை. அதில் நடித்தவர் வருத்தப்படுவார்" என சுந்தர்.சி தெரிவித்து இருக்கிறார்.
அவர் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தை பற்றி தான் சொல்கிறாரா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
