சுந்தர் சி உடன் இணையும் முன்னணி தெலுங்கு நடிகர்! யார் தெரியுமா
சுந்தர் சி
இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் அரண்மனை 4 முக்கியமான ஒன்று.
ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த இப்படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் கேங்ஸ்டர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் வடிவேலு - சுந்தர் சி காம்போ 14 வருடங்களுக்கு பின் இணைந்துள்ளதே, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
மேலும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படமும் இயக்குனர் சுந்தர் சி கைவசம் உள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து இயக்குனர் சுந்தர் சி படம் பண்ணப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.