விழா மேடையில் திடீரென எமோஷ்னலாக பேசிய சுந்தர்.சி- ஏன் தெரியுமா, இவர்தான் காரணம்
தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்கலாம் என்ற உத்தரவு வந்ததில் இருந்து படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இப்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஆன்ட்ரியா, ராஷி கண்ணா என பலர் நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படம் வெளியாக இருக்கிறது.
படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. அதில் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது, அரண்மனை 3 விவேக் சாரின் கடைசி படமாக அமையும் என எதிர்ப்பார்க்கவில்லை.
குஜராத்தில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் போது ஒரு குடும்பமாக இருந்தோம், அப்போது எங்களுக்கு எப்படி பிட்டாக இருப்பது போன்ற விஷயங்களை கூறியிருந்தார்.
அவர் இல்லாதது தமிழ் சினிமாவிற்கு பெரிய இழப்பு என பேசியுள்ளார்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu