சன் டிவி சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தது.. அவரே பகிர்ந்த குழந்தை போட்டோ
சுந்தரி சீரியல்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் தொடர்களில் ஒன்று சுந்தரி சீரியல். ‘
கேப்ரியல்லா முக்கிய நாயகியாக நடிக்க ஒளிபரப்பான இந்த தொடர் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருந்துவந்த இந்த சீரியல் 1144 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.
இந்த சீரியல் முடிந்ததும் நாயகி கேப்ரியல்லா வேறு ஏதாவது சீரியல் கமிட்டாவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.
குழந்தை
ஆனால் வேறொரு சந்தோஷ செய்தி கூறியிருந்தார், அதாவது அவர் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். பிறகு தனது சொந்த ஊருக்கே செல்வதாகவும் கூறியிருந்தார்.
அவரது வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கேப்ரியல்லா வீட்டிற்கு சென்று கலந்துகொண்டனர், அந்த புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தது.
தற்போது நடிகை கேப்ரியல்லா தனக்கு மகள் பிறந்திருப்பதாக இன்ஸ்டாவில் அழகிய போட்டோவுடன் பதிவு போட்டுள்ளார்.