கணவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ததால் விவாகரத்து பெறுகிறாரா சுந்தரி சீரியல் கேப்ரியல்லா... விஷயம் என்ன?
சுந்தரி சீரியல்
சன் தொலைக்காட்சியில் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் சுந்தரி.
கடந்த 2021ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2 சீசன்கள் என இதுவரை ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தமாக 1100 எபிசோடுகள் சுந்தரி சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருக்கிறது.
இதில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து கலக்கி வருகிறார் நடிகை கேப்ரியல்லா. தற்போது இந்த தொடர் முடிவுக்கு வரப்போவதாக செய்திகள் வந்துள்ளது.
விவாகரத்து
சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருபவர் கேப்ரியல்லா.
இவர் குறும்படங்களில் நடித்த போது கேமராமேனாக இருந்த சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது கணவருக்கு சீரியல் நடிப்பது பிடிக்கவில்லை, ஆனால் அம்மாவிற்கு நான் நடிப்பது பிடிக்கும்.
எனவே எனது கணவரை ஒப்புக்கொள்ள வைத்து தான் தொடர் நடிக்க வந்தேன் என ஒரு பேட்டியில் கேப்ரியல்லா கூறியிருப்பார்.
தற்போது என்னவென்றால் சில காரணங்களால் நடிகை கேப்ரியல்லா தனது கணவரை பிரிந்துவிட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
