சீரியல் நடிப்பது இவ்ளோ கஷ்டமா? சுந்தரி சீரியல் மேக்கிங் வீடியோ
சன் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சுந்தரி. திருமணம் செய்துவிட்டு அழகில்லை என்ற ஒரே காரணத்திற்காக சுந்தரியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஹீரோ தற்போது வசமாக சிக்கிக்கொண்டார். இதற்குப்பிறகு தற்போது சீரியல் மிக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சுந்தரியாக நடித்து வரும் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ தான் அது.
ஒரு சீரியஸான காட்சியில் அவர் நடித்து கொண்டிருக்கிறார், ஆனால் இறுதியில் அவர் சிரித்துவிடுகிறார். சில காட்சிகளில் தான் சிரிப்பை அடக்க அதிகம் கஷ்டப்படுவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மக்களை கண்ணீர் விட வைக்கும் சீரியல்கள் ஷூட்டிங்கில் இப்படியா நடக்கிறது என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.