இவனுக்கு இதுதான் தண்டனை.. சுந்தரி எடுத்த அதிரடி முடிவு! இன்றைய எபிசோடு அப்டேட்
சுந்தரி சீரியலில் தற்போது அனுவுக்கு கார்த்திக் பற்றிய உண்மை தெரியவந்ததால் அதிரடி முடிவெடுத்து அவனை பிரிந்து சென்றுவிடுகிறார்.
அனு காலில் விழுந்து கார்த்திக் கதறினாலும், அதை அனு ஏற்றுக்கொள்வதில்லை. யாரும் என்னை தேடி வர கூடாது, வந்தால் என் பிணம் தான் கிடைக்கும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
அதன் பின் கார்த்தி தான் சிக்கிக்கொள்ள சுந்தரி தான் காரணம் என சொல்லி, அவரை அடிக்க பாய்கிறார். அவனை தடுக்கும் சுந்தரியின் மாமா கார்த்திக் கழுத்தை நெரிக்கிறார்.
சுந்தரி எடுத்த முடிவு
ஆனால் சுந்தரி மாமாவை தடுக்கிறார். உடனே செத்துட்டா இவன் செஞ்ச தப்புக்கு தண்டனை யார் அனுபவிக்கிறது. யாரும் இல்லாமல் அனாதையாக இவன் வாழ்வது தான் இவனுக்கு ஒரே தண்டனை என கூறுகிறார்.
மற்றவர்களும் அதையே கூறுகின்றனர். அதனால் மாமா கார்த்திக்கை எச்சரித்து அனுப்புகிறார். அதன் பின் கார்த்திக் வெளியே சென்று அனுவை தேடி பார்க்கிறார்.
ஆனால் அனு கடற்கரைக்கு சென்று கடலை பார்த்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா என தற்கொலை எண்ணத்தில் அவர் இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
ஜெயிலர் இலங்கையில் ப்ளாக்பஸ்டர் வசூல்.. 11 நாளில் இத்தனை கோடியா

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
