அங்கிள் சிகரெட் அடிக்கிறது நிப்பாட்டுங்க.. ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2017 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநகரம். இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் சந்தீப் கிசன்.
இதையடுத்து தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர், 'மைக்கேல்' என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படம் நாளை பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது.
ரஜினிக்கு அட்வைஸ்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சந்தீப் கிசன், அவரின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "நான் சிறுவயதில் இருக்கும் போது, ராகவேந்திரா மண்டபம் அருகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அந்த படத்தின் நடன கலைஞர் என்னுடைய அண்ணன் தான், அதனால் என்னை அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து சென்றார்.”
”அங்கு ரஜினிகாந்த் சிகரெட் பிடித்து கொண்டு இருந்தார். நான் அவரிடம் சென்று, 'அங்கிள் இனி சிகரெட் பிடிக்காதிங்க' என்று கூறினேன். ஆனால் இப்போது நான் சிகரெட் பிடித்து வருகின்றேன்" என்று கூறினார்.
தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா?

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
