கூலி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா! 1000 கோடி வசூல்
கூலி
உறுதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளிவரும் எனசொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் விமர்சனம்
கூலி திரைப்படத்தின் முதல் 45 நிமிடத்தை காட்சிகளை நடிகர் சந்தீப் கிஷன் பார்த்துள்ளாராம். இந்த நிலையில், 45 நிமிடங்களை பார்த்த சந்தீப் கிஷன், கூலி திரைப்படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை கூறியுள்ளார்.
கூலி படம் குறித்து இவர் பேசியது தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது.