அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ள பிரபல நடிகர் சந்தீப் கிஷன்.. என்ன பிரச்சனை?
சந்தீப் கிஷன்
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்களில் ஒருவர் சந்தீப் கிஷன்.
தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன், கேப்டன் மில்லர், ராயன் என நடித்துள்ளார். இப்போது ரஜினியின் கூலி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்திலும் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதுதவிர வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
அறுவை சிகிச்சை
மஜாகா என்ற தெலுங்கு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சந்தீப் கிஷன் பேசுகையில், இவருக்கு கடுமையான சைனஸ் பிரச்சனை இருக்கிறதாம், அதனால் கழுத்து-தலையைச் சுற்றி கடுமையான வலி வருகிறதாம்.
இது மருந்துகளால் போகாது என்றும் கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதனால் சில நேரங்களில் தான் எரிச்சலாக இருப்பதாகவும் மற்றவர்களுடன் சரியாக பேசவும் முடிவதில்லையாம்.
இந்த பட ரிலீஸிற்கு பிறகு உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் எல்லோருக்கும் இருப்பது போல ஒரு சாதாரண பிரச்சனை எனக்கு, ஆனால் இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரியதாக பேசுவதாகவும் கூறியுள்ளார்.