விஜய்யின் சுறா படம் குறித்து மோசமான விமர்சனம் - பதிலளித்து டுவிட் செய்த நடிகர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.
விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, மிகப்பெரிய தோல்வியடைந்த படம் சுறா. இப்படம் குறித்து பிரபல நடிகர் சந்தீப் கிஷான், மோசமாக விமர்சித்து டுவிட் ஒன்றை செய்திருந்தார்.
அதாவது, " சுறா படத்தை இப்போது தான் பார்த்தேன், மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. என் மூளைகளை வெளியேற்றுகிறது.இந்த கதையை விஜய் முதலில் கேட்ட போது, இப்படி தான் இருந்திருக்கும் " என்று 2010ஆம் ஆண்டு இந்த பதிவை செய்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது டுவிட் ஒன்றை செய்துள்ளார் நடிகர் சந்தீப் கிஷான்.
இதில் " இதைப் பற்றி வெட்கப்பட ஒன்றுமில்லை. நான் விஜய் படங்களை பார்த்து ரசித்து தான், வளர்ந்தேன். இடையில் நான் வழக்கமான திரைப்பட பார்வையாளர்களாக இருந்தேன். ஆனால் தற்போது நான் பெருமையாக சொல்வேன், விஜய் ரசிகன் என்று.." என பதிவு செய்துள்ளார்.