சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகையை நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Kathick
in பிரபலங்கள்Report this article
சுந்தரா ட்ராவல்ஸ்
இயக்குநர் தஹா இயக்கத்தில் முரளி மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் சுந்தரா ட்ராவல்ஸ். 2002ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
குறிப்பாக இப்படத்தில் முரளி மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார்கள். இன்றும் அந்த காட்சிகளை பார்த்தல் அனைவரும் விழுந்து விழுந்த தான் சிரிப்பார்கள்.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை ராதா. இப்படத்தை தொடர்ந்து கேம், அடாவடி, காத்தவராயன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. இதன்பின் சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.
நடிகை ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
தற்போது சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நடிகையா இது எனஷாக்காகி கேட்டு வருகிறார்கள். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்..

