Sunny Sanskari Ki Tulsi Kumari திரை விமர்சனம்
Sunny Sanskari Ki Tulsi Kumari திரை விமர்சனம்
வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில் ரொமாண்டிக் காமெடி படமாக வெளியாகியுள்ள Sunny Sanskari Ki Tulsi Kumari விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.
கதைக்களம்
சன்னி சன்ஸ்கரி (வருண் தவான்) இரண்டு ஆண்டுகளாக அனன்யாவை (சான்யா மல்ஹோத்ரா) காதலித்து வருகிறார். அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படும் சன்னி, கையில் மோதிரத்துடன் சென்று ப்ரபோஸ் செய்கிறார்.
ஆனால், நாம் Situationshipயில்தான் இருந்தோம். அதற்காக திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறி அனன்யா பிரேக்அப் செய்கிறார். அதே சமயம் பணக்கார இளைஞரான விக்ரம் சிங் (ரோஹித் ஸாரப்) மிடில் கிளாஸ் பெண்ணான துல்சி குமாரி (ஜான்வி கபூர்) உடனான காதலை அண்ணனின் வற்புறுத்தலால் முறித்துக் கொள்கிறார்.
சன்னியும், துல்சியும் சோகத்தில் இருக்க, விக்ரம் மற்றும் அனன்யா இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனை அறிந்த சன்னி, துல்சியை சந்தித்து திருமணத்தை நிறுத்தி தங்கள் காதலருடன் சேர வேண்டும் எனக் கூறி உதய்ப்பூருக்கு அழைத்து செல்கிறார்.
அதன் பின்னர் விக்ரம், அனன்யாவின் திருமணம் நிறுத்தப்பட்டதா? யார் யாருடன் கடைசியில் சேர்ந்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
திருமண வீட்டில் நடக்கும் கலாட்டா கதைக்களத்தில் ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா, பத்ரிநாத் கி துல்ஹனியா ஆகிய படங்களை கொடுத்த ஷஷங் கைதான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். காதல் முறிவுக்கு பின் திருமண வீட்டிற்கு செல்லும் வருண் தவானும், ஜான்வி கபூரும் செய்யும் அட்டகாசங்கள் செம கலாட்டா.
முதல் பாதியில் முடிந்தவரை நம்ம சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். சில இடங்களில் அது ஒர்க்அவுட்வும் ஆகியிருக்கிறது. இரண்டாம் பாதியில் எமோஷனல் தூக்கலாக செல்லும்போதுதான் கதாபாத்திரங்களுடன் ஒன்ற முடிகிறது.
தனக்கான தனித்துவம் வேண்டும், அடையாளத்தை திருமணத்திற்கு பின் ஒரு பெண் விட்டுவிடக் கூடாது என்பது போன்ற நல்ல கருத்துக்களையும் இயக்குநர் கூறியிருக்கிறார். ஆனால் படத்தில் கிளாமர்தான் ஓவரோ ஓவர்.
ஜான்வி கபூரின் காஸ்டியூஸ்ம் கண்கூசும் அளவிற்கு கிளாமராக உள்ளன. ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. கிளைமேக்ஸில் வருண் தவான் செய்யும் காமெடிக்கு திரையரங்கமே சிரிப்பலையில் ஆழ்கிறது.
துடுப்பான இளைஞராக காமெடி, டான்ஸ் என அசத்தும் வருண் தவான் சென்டிமென்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். ஜான்வி கபூர் மேல் காதல் வயப்படும் காட்சிகளில் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
அதேபோல் ஜான்வி கபூரும் துல்சி குமாரி கதாபாத்திரத்திற்கு நன்கு பொருந்தியிருக்கிறார். ஹாலிவுட் படமொன்றின் தழுவாக தமிழில் பரத் நடித்த படத்தின் அதே கதைதான் இந்த Sunny Sanskari Ki Tulsi Kumari. என்றாலும் அழுத்தம் குறைவாக இருப்பதுடன் கிளைமேக்ஸை மாற்றியிருக்கிறார்கள். பாடல்கள் ஓகே ரகம்தான்.
மனுஷ் நந்தனின் கேமரா ஒர்க் படத்தை பிரம்மாண்டமாக காட்டுகிறது.
க்ளாப்ஸ்
வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பு ரொமான்ஸ் காட்சிகள் கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கலாம் கதைக்கு தேவையில்லாத ஓவர் கிளாமர்
மொத்தத்தில் காமெடி என்டேர்டைன்மெண்டாக பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார்கள் இந்த சன்னியும், துல்சி குமாரியும். ஜாலியாக ஒரு விசிட் அடிக்கலாம் Sunny Sanskari Ki Tulsi Kumari-க்கு.