சின்ன குழந்தைகளிடம் அந்த மாதிரி கேள்வி.. ஷில்பா ஷெட்டியால் வெடித்த பிரச்சனை
ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி ஹிந்தி சினிமாவில் பாப்புலரான ஹீரோயின். அவர் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
அவர் Super Dancer - Chapter 3 என்ற ஷோவில் நடுவராக இருந்து வரும் நிலையில் சமீபத்தியன் எபிசோடு ஒன்றில் மைனர் சிறுவனிடம் மேடையில் ஆபாசமான வகையில் கேள்விகள் கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.
குழந்தைகள் ஆணையம் நோட்டிஸ்
குழந்தைகளிடம் தகாத கேள்விகள் கேட்டதை ஒளிபரப்பிய சோனி Entertainment Televisionக்கு தற்போது குழந்தைகள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.
மேலும் அந்த ஷோ எபிசோடை அனைத்து இடங்களில் இருந்து நீக்கவும் ஆணையம் கூறி இருக்கிறது. அந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் வைரல் ஆன நிலையில் தற்போது இவ்வளவு பெரிய சர்ச்சையில் ஷில்பா ஷெட்டி மாட்டி இருக்கிறார்.
குக் வித் கோமாளி 4 டைட்டில் ஜெயித்தது இவர்தான்! எமோஷ்னலாக முடிந்த ஷோ