பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் சீசன் தொடங்கப்பட்டு 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது. முதல் சீசன் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் கதையாக அமைந்தது.
முதல் சீசன் முடிவடைந்த வேகத்திலேயே 2ம் சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
குட் நியூஸ்
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் கதைக்களத்தில் பழனியின் திருமண காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஏற்பாடு செய்த இந்த 2வது முறை திருமணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அடுத்தடுத்து விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது மறு ஒளிபரப்பாக காலை 10.30 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் மீண்டும் ஒளிபரப்பா உள்ளதாம்.
இது பொன்னி, அன்புடன் கண்மணி தொடர்களின் மெகா சங்கமம் முடியும் வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் மறுஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
