சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ், இனி ஜாலி தான்... என்ன விஷயம் தெரியுமா?
சன் டிவி
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அசைக்க முடியா இடத்தில் இருந்து வருகிறது சன் டிவி.
டிஆர்பியில் இவர்கள் தான் கிங், இவர்களின் இடத்தை தொட மற்ற தொலைக்காட்சிகள் போராடி தான் வருகிறார்கள் ஆனால் தொட முடியவில்லை. சன் டிவியும் சீரியல்கள் மூலம் தங்களது டிஆர்பியை உயர்த்த நிறைய மாற்றங்கள், புதிய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.
டிஆர்பிக்காக அன்னம், கயல், மருமகள் 3 சீரியல்களின் மெகா சங்கமத்தை ஒளிபரப்பி வருகிறார்கள்.
புதிய விஷயம்
இந்த நிலையில் சன் டிவி சீரியல் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அதாவது ஏற்கெனவே அந்த நாளுக்கான சீரியலின் புரொமோ, Preview போட்டு மக்களை ஆக்டீவாக சீரியல் பார்க்க வைத்து வருகின்றனர்.
தற்போது வந்துள்ள குட் நியூஸ் என்னவென்றால் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் 4 முக்கிய சீரியல்களை மட்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பே பார்க்க முடியுமாம்.
அது என்னென்ன சீரியல்கள் என்றால் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் தொடர்கிறது இந்த 4 சீரியல்களை மட்டும் முன்பே பார்க்கலாமாம். இந்த நியூஸ் ரசிகர்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸாக அமைந்துள்ளது.