சூப்பர் மேன் படத்தின் வசூலை கேட்டால் அசந்து போயிடுவீங்க, இத்தனை ஆயிரம் கோடிகளா!
Super man
ஹாலிவுட் சினிமாக்களின் விஜய், அஜித் என்றால் மார்வல், டிசி தான், இவர்கள் படம் வரும் நேரத்தில் ரசிகர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக்கொள்வார்கள். அப்படி சண்டைப்போடும் இவர்கள் இருவருமே கடந்த சில வருடங்களாக அமைதியாகவே உள்ளனர்.
ஏனெனில் மார்வல், டிசி இரண்டு கம்பெனி படங்களும் சமீப காலமாக படுதோல்வியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் டிசி உருவாக்கத்தில் கடந்த வாரம் சூப்பர் மேன் படம் திரைக்கு வந்தது.
வசூல்
ஏற்கனவே ஸ்னைடர் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்க்க, இதுவும் அவ்வளவு தான் என்று நினைத்தால், படம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை சக்கை போடு போடுகின்றது.
ஆம், சூப்பர் மேன் படம் வெளிவந்த 6 நாட்களில் ப்ரீமியருடன் சேர்த்து உலகம் முழுவதும் 314 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது. ரூபாய் மதிப்பில் இப்படம் 2694+ கோடி வசூல் செய்துள்ளது, அதுவும் இந்தியாவில் இந்த படம் ரூ 32 கோடி வசூல் செய்துள்ளதாம்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
