Super Man திரை விமர்சனம்
ஜாக் ஸ்னைடர் சூப்பர் மேன் சீரிஸீல் ஆரம்பித்து ஜெஸ்டிஸ் லீக் ஸ்னைடர் வெர்ஸ் தொடருமா என்று காத்திருந்த டிசி ரசிகர்களுக்கு இனி நான் புது யுனிவர்ஸை உருவாக்குகிறேன் என ஜேம்ஸ் கன் உருவாக்கிய இந்த சூப்பர் மேன் எப்படி, ரசிகர்களை திருப்திபடுத்தியது பார்ப்போம்.
கதைக்களம்:
பொரேவியன் நாடு பக்கத்து நாட்டை போர் எடுப்பதை சூப்பர் மேன் நிறுத்துகிறார். அதே நேரத்தில் லூதர் தொழிலதிபர் அந்த நாட்டின் மூலம் எதோ பயன் பெற நினைக்கிறார், அதற்கு அந்த போர் நடந்தே ஆகனும்.
அதற்காக சூப்பர்மேன் மீது தவறாக பழியை போட்டு அவரை மக்களுக்கு எதிராக திருப்புகிறார். மக்களும் சூப்பர் மேனை திட்ட ஆரம்பிக்கின்றனர்.
இது தான் நேரம் என்று லூதர் தான் உருவாக்கிய பாக்கெட் யுனிவர்ஸில் சூப்பர் மேனை அடைக்கிறார், அதன் பிறகு சூப்பர் மேன் அதிலிருந்து வெளியே வந்தாரா, அப்படி வந்து லூதர் திட்டத்தை முறியடித்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்:
சூப்பர் மேன் படம் என்றாலே ஒரே விஷயத்தை தான் திருப்பி திருப்பி எடுப்பார்கள், ஆனால், அதை எப்படி சுவாரஸ்யமாக எடுக்கிறார்கள் என்பதே இதில் சிறப்பு.
அந்த வகையில் ஜேம்ஸ் கன் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதே உண்மை, சூப்பர் மேனாக டேவிட் கார்ன்ஸ்வேட் அத்தனை சிறப்பாக பொருந்தி போகிறார், க்ளார்க் ஆக சிற நிமிடங்கள் வந்தாலும், படம் முழுவதும் சூப்பர் மேன் ஷுட்டில் தான் வந்து அசத்துகிறார்.
ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றாலே வில்லன் கதாபாத்திரம் வலுவாக இருக்க வேண்டுன், அந்த வகையில் லூதர் கதாபாத்திரத்தில் நிக்கோலஸ் வில்லனாக அசத்தியுள்ளார்.
சொல்லப்போனால் படத்தின் முதல் பாதியில் சூப்பர் மேன்-யை அடித்து துவைத்து இரு கண்ணாடி பெட்டிக்குள்ளையே அடைத்துவிடுகிறார்.
அதை தொடர்ந்து பொரேவியர் வார் தடுக்க வேண்டும், அதே நேரத்தில் லூதர் செய்த வேலையால் அமெரிக்கா இரண்டாக பிளந்துக்கொண்டே போகிறது, இது இரண்டையும் சூப்பர் மேன் எப்படி முறியடிப்பார் என்ற பதட்டம் திரைக்கதையில் பற்றி கொள்கிறது.
அதற்கு ஏற்ற காட்சிகள் இருந்தாலும் பொரேவியர் வார்-யை நிப்பாட்ட ஜெஸ்சிஸ் கேங் செல்ல்வது எல்லாம் எதோ கேமியோ போல் வந்து போகின்றனர், ஒரு கூஸ்பம்ஸும் இல்லை.
எதற்கு இந்த ஜெஸ்டிஸ் கேங் அதி டெரபிக் கதாபாத்திரம் கூட எதோ செய்கிறார், மற்ற கதாபாத்திரம் எல்லாம் கொஞ்சம் கூட மனதில் ஒட்டவில்லை.
அதே நேரத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம் தான் சூப்பர் ஹீரோ படத்தில், அதற்காக சூப்பர் மேன் காதலி ஸ்பேஸ் ஷிப் எல்லாம் ஓட்டுவது எல்லை மீறல் ப்பா..
டெக்னிக்கலாக படத்தின் இசை நன்றாக உள்ளது, ஆனால், ஒளிப்பதிவு எதோ பழைய படம் பார்ப்பது போல் உள்ளது, அதோடு சிஜி காட்சிகளும் கொஞ்சம் அப்பட்டமாக தெரிகிறது.
இதெல்லாம் விட கூடுதல் சிறப்பாக கிரிப்டோ அந்த நாய் அட்டகாசம்ப்பா..
க்ளாப்ஸ்:
படத்தின் கதை மற்றும் திரைக்கதை
படத்தின் கிளைமேக்ஸ் சூப்பர் மேன் சண்டை காட்சி.
பல்ப்ஸ்:
பெரிதாக எமோஷ்னலாக எந்த காட்சியும் இல்லை.
டெக்னிக்கல் ஆக கொஞ்சம் வீக் ஆகவே உள்ளது .
மொத்ததில் டார்க் டிசி ஜேம்ஸ் கன் கை வண்ணத்தில் தற்போது செம கலர்புல்லாக மாறியுள்ளது, அது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் விருந்து தான்.
3/5

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
