விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்- அட இந்த சீரியல்களா, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழும் சரஸ்வதியும் விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல். இதன் கதையே எல்லா சீரியல்களை விட படு வித்தியாசமாக ஒரு பிரச்சனை என்றால் அதை இழுத்தடிக்காமல் உடனுக்குடன் அதிரடியாக நடக்கும் கதைக்களமாக உள்ளது.
ரசிகர்களும் சீரியலுக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்த TRPயை விட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது.
இப்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் என இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மெகா சங்கமம் எப்படிபட்ட கதையாக அமையும் என்பது தெரியவில்லை.
ஆனால் புதிய சீரியலுடன் நடக்கப்போகும் மெகா சங்கமம் என்பதால் ரசிகர்கள் அதை காண படு ஆவலாக உள்ளனர்.