சீரியல்களில் நடிகை ராதிகாவை ரசித்த ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- ஆனால்?
சின்னத்திரையில் ஒரு சில திரைப்பட நடிகைகள் பெரிய இடத்தை பிடித்துள்ளார்கள். அப்படி 80களில் திரைப்படங்களில் கலக்கி பின் சின்னத்திரை பக்கம் வந்து பெரிய சாதனை செய்தவர் நடிகை ராதிகா.
ராடான் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் நிறைய சீரியல் தயாரித்து, நடித்தும் வருகிறார். கடைசியாக சித்தி 2 சீரியலில் நடித்து வந்தார்.
ஆனால் திடீரென இனி சீரியலில் நடிக்கப்போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டார், இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தார்கள்.
தற்போது என்ன செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது என்றால் நடிகை ராதிகா மீண்டும் சீரியல்களில் நடிக்க வர இருப்பதாகவும், சித்தி 2 அல்லது புதிய சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர்.
இப்போது அவரது என்ட்ரி குறித்து வரும் தகவலே இன்னும் உறுதியாகவில்லை.