செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- ரசிகர்களே கொண்டாட தயாரா?
தமிழில் பல சிரியல்கள் ஹிட்டடித்து வருகிறது. அப்படி ரோஜா, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், வானத்தை போல, செம்பருத்தி, யாரடி நீ மோகினி என இப்படி ஹிட் சீரியல்களை கூறலாம்.
இநத சீரியல்கள் TRPயில் முன்னணியில் வர பல விஷயங்கள் செய்கிறார்கள். ஹிட்டாக ஓடி 100, 500 என எபிசோடுகள் பெறுவது என்பது சில சீரியல்கள் தான்.
அந்த லிஸ்டில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலும் இடம்பெறும். இந்த சீரியல் ஒரு காலத்தில் TRPயில் முதல் இடம் எல்லாம் பிடித்தது.
தற்போது சீரியலின் முக்கிய நாயகன் மாற்றம் நடந்தும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.
சீரியல் இன்னும் 8 நாட்கள் கடந்தால் 1000வது எபிசோடை எட்டிவுள்ளதாம்.
இதனை இப்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.