சூப்பர் சிங்கரில் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி! வீடியோ இதோ
சூப்பர் சிங்கர் ஜூனியர்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர் மற்றும் ஜூனியர் என நடந்து வரும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் 10வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த மாகாபா மற்றும் ப்ரியங்கா இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும் இசையமைப்பாளர் டி இமான், பின்னணி பாடகி சித்ரா மற்றும் பின்னணி பாடகர் மனோ ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ப்ரியங்கா
பல்வேறு இடங்களில் இருந்து பல திறமையான சிறுவர்கள், சிறுமிகள் இந்த நிகழ்ச்சிகள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இதில், இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து சூப்பர் சிங்கர் 10 ஜூனியரில் முக்கியமான போட்டியாளராகியுள்ளார் ப்ரியங்கா. இவர் பாடல்கள் பாடுவதையும் தாண்டி, மைண்ட் ரீடிங் செய்வதிலும் திறமையவராக இருக்கிறார்.
கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில், தொகுப்பாளர்கள் மாகாபா மற்றும் ப்ரியங்காவிடம், இவர் மைண்ட் ரீடிங் செய்துள்ளார். இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..