சூப்பர் சிங்கர் 3 ஜுனியர் போட்டியில் கலந்துகொண்ட யாழினியா இது?- இப்போது எப்படி உள்ளார் பார்த்தீர்களா?
சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளும் மக்களுக்கு பிடித்தமானதாக தான் உள்ளது. அப்படி ரசிகர்கள் பல சீசன்கள் ஓடியும் வரவேற்பு அதிகம் கொடுப்பது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தான்.
இந்நிகழ்ச்சியின் ஜுனியர் மற்றும் பெரியவர்களுக்காக நிறைய சீசன்கள் வந்துவிட்டது. இப்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பென்னி தயால், ஸ்வேதா, உன்னி கிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
புதிய சீசன்
தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த புதிய சீசனில் நமக்கு ஏற்கெனவே பரீட்சயப்பட்ட பிரபலம் அதாவது ஜுனியர் 3வது சீசனில் கலந்துகொண்ட யாழினி தற்போதைய சீசனில் கலந்துகொண்டு வருகிறார்.
அவர் பாடுவதையும், அவரையும் கண்ட ரசிகர்கள் அட ஜுனியர் சீசனில் வந்தவரா இவர் ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.