சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நபர் - கண்கலங்கிய போட்டியாளர்கள்
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிகழ்ச்சி தான், சூப்பர் சிங்கர். தற்போது இந்த சூப்பர் சிங்கரில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், அதில் போட்டியுடன் எலிமினேஷனும் இருக்கும். அந்த வகையில் சென்ற வாரம் சூப்பர் சிங்கர் 8ல் ரேஷ்மா மற்றும் கபினி என்று இருவர் எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்க பட்டனர்.
இந்நிலையில் இதில் குறைந்த வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றுருந்த, கபினி சூப்பர் சிங்கர் போட்டியில் இருந்த வெளியேறினார்.
கபினிக்காக கண்கலங்கிய மற்ற போட்டியாளர்களையும், இறுதியில் சிரிக்க வைத்து தான் வெளியேறினார் கபினி.