விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 9 ஜுனியர் நிகழ்ச்சியின் 4 Finalist யார் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்து படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் சூப்பர் சிங்கர் 9 ஜுனியர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இசையமைப்பாளர் தமன், பாடகர்கள் சித்ரா மற்றும் ஆண்டனி தாசன் என 3 பேரும் இந்த ஷோவின் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் குழந்தைகள் அழகாக பாடி நடுவர்களை கவர்வதோடு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்கள்.
Finalist
தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, ரசிகர்களும் உற்சாகமாக தங்களுக்கு பிடித்த போட்டியாளரை ஆதரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வார நிகழ்ச்சியில் இருந்து 3 மற்றும் 4வது Finalist தேர்வாகியுள்ளனர். 4 பைனலிஸ்ட் யார் யார் என்ற விவரம் இதோ,
- ஸ்ரீநிதா
- ஹர்ஷினி நேத்ரா
- ரிச்சா
- அக்ஷாரா லட்சுமி