மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ளும் பென்னி தயாள்!

vijay tv super singer Benny Dayal
By Jeeva Feb 19, 2022 07:20 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், கடைசியாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாக பேசப்பட்டவர் ஸ்ரீதர் சேனா.

அருமையாக பாடி வந்த ஸ்ரீதர் சேனாவை திடீரென அந்த போட்டியில் இருந்து வெளியேற்றினர், இதனால் நன்றாகப் பாடுபவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு சுமாராக பாடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ரசிகர்கள் கூறிவந்தனர்.  

இசை மற்றும் பாடல்களில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட நடுவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என மிகப்பெரிய சர்ச்சை அப்போது எழும்பியது.

மேலும் அந்த சீசன் மட்டுமின்றி பல சீசன்களில் நடுவராக பங்கேற்று வந்தவர் பென்னி தயாள், ஸ்ரீதர் சேனா சர்ச்சையை தொடர்ந்து இனி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என பென்னி தயாள் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே தற்போது மீண்டும் சூப்பர் சிங்கரில் பென்னி தயாள் கலந்துக் கொள்ள இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் தோன்றி இருக்கிறத்து.

சூப்பர் சிங்கர் டிரஸ்சிங் ரூமில் அரபிக் குத்து பாடலுக்கு பிரியங்கா, பென்னி தயாள், மாகாபா மற்றும் டீஜே பிளாக் ஆகியோர் நடனமாடும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் சூப்பர் சிங்கரில் கலந்துகொள்ள போகிறாரா என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US