தனது மகனின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா- ஆஜரான பிரபலங்கள்
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பல உள்ளன, அதில் ஒன்ற தான் சூப்பர் சிங்கர்.
சிறியவர்கள், பெரியவர்கள் என சீசன்கள் மாறி மாறி நடந்து வந்தது, தற்போது கூட சூப்பர் சிங்கர் புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பங்குபெற்ற பலருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து பாடி வருகிறார்கள்.
அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா, இவரிடம் உள்ள சிறப்பான விஷயம் என்னவென்றால் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் பாடுவார்.
சூப்பர் சிங்கரை தொடர்ந்து ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பாடிவந்த அஜய் கிருஷ்ணா நிறைய தனியார் நிகழ்ச்சிகள், வெளிநாடுகளில் இசை மேடை என கலக்கி வருகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
கடந்த 2022ம் ஆண்டு அஜய் கிருஷ்ணா தனது நீண்டநாள் காதலி ஜெசி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது, மகனுக்கு அயான் எனவும் பெயரிட்டனர்.
இந்த நிலையில் அயானின் முதல் பிறந்தநாளை அஜய் கிருஷ்ணா மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.