சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ
அனுராதா ஸ்ரீராம்
வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் அனுராதா ஸ்ரீராம். மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாம்பே படத்தின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, நிலவை கொண்டு வா, மல்லிகையே மல்லிகையே என பல சூப்பர்ஹிட் பாடல்களை தமிழில் பாடியுள்ளார். மேலும் இவர் தமிழ், கன்னடம், பெங்காலி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவாக பணியாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் கமண்ட்ஸ் சொல்வதை தாண்டி, நடக்கும் நகைச்சுவைகள் ரசிகர்களிடையே அவ்வப்போது வைரலாகும்.
அனுராதா ஸ்ரீராமின் கணவர்
இந்த நிலையில், பின்னணி பாடகியாக கொடிகட்டி பறக்கும் அனுராதா ஸ்ரீராமின் சொந்த வாழ்க்கை குறித்து பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் ஸ்ரீராம் பரசுராம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவரும் பிரபல பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு ஜெயந்த் மற்றும் லோகேஷ் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video



30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
