சூப்பர் சிங்கர் சர்ச்சையில் சிக்கிய பென்னி தயாள்.. மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டாரா..?
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல சீசன்களாக நடுவராக பணிபுரிந்து வந்தவர் பின்னணி பாடகர் பென்னி தயாள்.
இவர் தமிழ் சினிமாவில் பாடிய பல பாடல்கள் இதுவரை நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.
சூப்பர் சிங்கர் சீசன் 8ல் நடுவராக இருந்து வந்த பென்னி தயாள், ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதன் காரணமாக சில சர்ச்சையில் சிக்கினார்.
இதனால், மனமுடைத்துப்போன பென்னி தயாள், இதுவே எனது கடைசி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதற்கு பின் நான் எந்த ஒரு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக வரமாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த அரபிக் குத்து பாடலுக்கு, பிரியங்கா, மாகாபா மற்றும் பென்னி தயாள் மூவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், பென்னி தயாள் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டாரா என்று கேட்க துவங்கிவிட்டனர்.
ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் பென்னி தயாள் வெளியிடவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம், பென்னி தயாள் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளாரா..? இல்லையா..? என்று..
Vijay tv priyanka Insta reels?#Beast #ArabicKuthuhttps://t.co/TIG6tRclZc pic.twitter.com/mONLsG7xZU
— ♡ •?????• ♡ (@Beast3raj) February 16, 2022