பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சூப்பர் சிங்கர் பிரபலம், யார் தெரியுமா?- லேட்டஸ்ட் நியூஸ்
பிக்பாஸ் 6வது சீசன்
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் அதாவது வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கவுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த 6வது சீசன் எப்படி இருக்கப்போகிறது, யார் யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.
நிகழ்ச்சியில் யார் யார் எல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரம் சில கசிந்தாலும் உண்மை நிலவரம் ஆரம்ப நிகழ்ச்சியின் போது தான் தெரியும்.
பிக்பாஸ் 6வது சீசன் வீட்டின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாக சிலரும் அந்த வீட்டை நேரில் சென்று பார்த்துள்ளனர்.
சூப்பர் சிங்கர் பிரபலம்
தற்போது பிக்பாஸ் 6வது சீசன் வீட்டிற்கு சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர். பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால் இருவரும் லேட்டஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அந்த புகைப்படங்களையும் ராஜ் மோகன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படம் குறித்து ஹாலிவுட் நடிகை போட்ட பதிவு