வடிவேலுவின் நாய் சேகர் Returns படத்தில் நடிக்கும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலம்.. யார் தெரியுமா
23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாது என்று, ரெட் கார்ட் தரப்பட்டது.
இவர் நடிப்பில் கடைசியாக விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது. ஆனால், தற்போது அணைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகர் வடிவேலு.
பல வருடங்கள் கழித்து வடிவேலு நடிக்கவிருக்கும் புதிய படம் நாய்சேகர் returns. மேலும் இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் First look மோஷன் போஸ்டரை தொடர்ந்து, இன்று நாய் சேகர் Returns படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.
பூஜையில் வடிவேலு, இயக்குனர் சுராஜ், நடிகர் ரெடின் கிங்ஸ்லி,சந்தோஷ் நாராயணன் மற்றும் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான சிவாங்கியும் கலந்துகொண்டுள்ளார்.
இதன்முலம், சிவாங்கியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான், காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் சிவாங்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
