சூப்பர் சிங்கர் புகழ் பாடகி அனுராதா ஸ்ரீராம் கணவரை பார்த்துள்ளீர்களா?- காதல் கல்யாணமா?
அனுராதா ஸ்ரீராம்
தன்னுடைய 6 வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கியவர் தான் பாடகி அனுராதா ஸ்ரீராம். பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு பாடலை குரூப் பாடகராக பாடி சினிமாவிற்குள் அறிமுகமானார்.
மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் மக்களிடம் ரீச் ஆன இவர் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக இருந்து வருகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ள இவர் அனைத்து மொழிகளிலும் சேர்ந்து சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார்.
திருமணம்
அனுராதா தனது கணவர் ஸ்ரீராம் பாசுரம் என்பவரை அமெரிக்காவில் தான் சந்தித்துள்ளார். அதன்பின் அடுத்தடுத்து இருவரும் பழகும் வாய்ப்புகள் கிடைக்க அப்படியே அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நடிகர் பார்த்திபனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக அவரே ஷேர் செய்த கியூட் வீடியோ