கோலாகலமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் புகழ் DJ Black திருமணம்... போட்டோஸ் இதோ
DJ Black
விஜய் டிவியில் செம ஹிட்டாக பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள், போட்டியாளர்கள், நடுவர்களை தாண்டி முக்கிய பங்கு வகித்து வருபவர் தான் DJ பிளாக். டைமிங்கில் காமெடி கமெண்ட் செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பவர்.
பிளாக் என அனைவரும் அழைத்தாலும் இவரது நிஜப் பெயர் சுதன் குமார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி இசையமைப்பாளர்கள் பலரின் இசைக் கச்சேரிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

திருமணம்
கடந்த சில வாரங்களுக்கு முன் தனது திருமணம் ஆகப்போவதாக ஒரு புகைப்படம் வெளியிட்டார் பிளாக்.

இந்த நிலையில் சுதன்குமாருக்கும் ரம்யா என்பவருக்கும் இன்று ஆகஸ்ட் 28, கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. புதிய ஜோடியின் போட்டோ வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
