செம மாடர்ன் உடையில் ஆளே மாறி ஹிட் பாடலுக்கு ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பூஜா... வைரல் வீடியோ
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக இருக்கும் விஜய் டிவி இப்போதும் நிறைய வித்தியாசமான ஷோக்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வித்தியாசமான கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சி ஆரம்பமே அமர்க்களமாக தான் தொடங்கியுள்ளது, ரசிகர்களும் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் பாடல்கள் பாடி அசத்தி வருபவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூஜா வெங்கட் லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் செம மாடர்ன் உடை அணிந்து ஏழாம் அறிவு பட பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். அவரது வீடியோ வெளியிட அட சூப்பர் சிங்கர் பூஜாவா இது செம செம என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.