சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி குருபிரசாத் வாங்கிய முதல் புதிய கார்- அவரே வெளியிட்ட போட்டோ
பிரகதி குருபிரசாத்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்தது.
இப்போது பலரும் தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடி வருகிறார்கள், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்து பாடுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளர்கள் நடத்தும் கச்சேரிகளில் அதிகம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகர்கள் தான் இடம்பெறுகிறார்கள்.
அப்படி சூப்பர் சிங்கரில் சிறுவர்களுக்கான சீசனில் பாடி பிரபலம் ஆனவர் தான் பிரகதி குருபிரசாத்.
புதிய கார்
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிடும் பிரகதி தற்போது ஒரு புதிய காரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
புதிய காரின் முன் பிரகதி புகைப்படம் எடுத்து போட்டு நான் வாங்கிய பெரிய முதல் பொருள், நிறைய கூற வேண்டும் ஆனால் தற்போது எமோஷ்னலாக உள்ளது என பதிவு போட்டுள்ளார்.
அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
விவாகரத்திற்கு பிறகு தனுஷ் என்னிடம் கூறிய விஷயம் இதுதான்- செல்வராகவன் ஓபன் டாக்

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu
