சூப்பர் சிங்கர் புகழ் உன்னி கிருஷ்ணனின் மகளை தெரியும், மனைவி மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
உன்னி கிருஷ்ணன்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகராக இருந்தவர் உன்னி கிருஷ்ணன்.
இவர் திரைப்பட பாடகர் மட்டுமில்லாமல் கர்நாடக இசைக் கலைஞரும் ஆவார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தனது 12 வயதிலேயே கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு’ இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பல வருடங்களுக்கு மேலாக உன்னி கிருஷ்ணன் பாடிக் கொண்டு வருகிறார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார்.
அழகிய குடும்பம்
உன்னி கிருஷ்ணனுக்கு 1994ம் ஆண்டு பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு உத்ரா மற்றும் வாசுதேவ் என்ற ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா சைவம் படத்தில் அழகு என்ற பாடலை முதலில் பாடியிருந்தார்.
அதன்பிறகு பிசாசு, தெறி, லக்ஷமி போன்ற பாடங்களிலும் பாடல்கள் பாடியிருக்கிறார். உன்னி கிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல்