சூப்பர் சிங்கர் ஜுனியர் 10வது சீசனின் 5வது Finalist யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் எந்த ஒரு ரியாலிட்டி ஷோவுக்கும் இல்லாத கிரேஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உள்ளது.
சீனியர், ஜுனியர் என இரண்டு பிரிவாக நடைபெற்று வருகிறது. இந்த பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் சினிமாவில் பின்னணி பாடகர்களாக மாறி இருக்கிறார்கள்.
போட்டியாளர்கள் பாடல்கள் பாடும் போதே சிலருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது.
10வது சீசன்
தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜுனியருக்கான 10வது சீசன் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடி வர இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி எட்டிவிட்டது. ஆத்யா, சாரா ஸ்ருதி, நஸ்ரின், லிடன் என 4 பைனலிஸ்ட் இதுவரை தேர்வானார்கள்.
கடந்த வார எபிசோடில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 சீசனின் 5வது பைனலிஸ்ட் தேர்வாகியுள்ளார். தேனியை சேர்ந்த காயத்ரி தான் 5வது பைனலிஸ்டாக தேர்வாகியுள்ளார், இந்த 5 பேரில் யார் 10வது சீசன் டைட்டிலை ஜெயிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.