பிரமாண்டமாக துவங்கும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சின்னத்திரையில் பல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.
இதில் இதுவரை ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சீசன்களை கடந்துள்ள நிகழ்ச்சி சூப்பர்சிங்கர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் பிரமாண்டமான முறையில் துவங்கவுள்ளது.
இந்த சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சிக்கு சின்னக்குயில் சித்ரா, சங்கர் மஹாதேவன், கல்பனா மற்றும் நகுல் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
வரும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் துவங்கவுள்ள, இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ..