சூப்பர் சிங்கர் ஜுனியரில் சிறுமியின் ஆசை நிறைவேற்றி அழ வைத்த மாரி செல்வராஜ்- எமோஷ்னல் வீடியோ

Yathrika
in தொலைக்காட்சிReport this article
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசியாக பெரியவர்களுக்கான சீசன் முடிவடைந்தது, அதில் அருணா வெற்றியாளராக தேர்வாகி இருந்தார்.

3 பிரபலங்களை வைத்து தனது கனவு இல்லத்தை திறக்க நினைத்த மறைந்த நடிகர் மாரிமுத்து- யார் அவர்கள் தெரியுமா?
அந்த நிகழ்ச்சி முடிந்த கையோடு சிறியவர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரபலம் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகின்றனர்.
இந்த வாரமும் அப்படி ஒரு பிரபலம் வர ஒரு எமோஷ்னல் நிகழ்வு நடந்துள்ளது.
எமோஷ்னல் ஆன சிறுமி
இந்நிகழ்ச்சியில் சிறுமி அஸ்வினி தனக்கு மாரி செல்வராஜ் ரொம்பவே பிடிக்கும் என அவருடைய பாடலை பாடி பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறார்.
பாடலை பாடி முடித்ததும் நான் இதுவரை பாடிய பாடல் எல்லாமே மாரி செல்வராஜ் சாரோட பாடல்கள் தான் என கூறிக்கொண்டு இருக்கும் போதே இயக்குனர் மேடையில் எண்ட்ரீ கொடுத்துள்ளார்.
மாரி செல்வராஜை பார்த்ததும் கண்கலங்கி அழுது அவருடைய காலில் விழ அதை அவர் தடுக்கிறார். அஸ்வினி, மாரி செல்வராஜ் அவர்களை பார்த்தது ரொம்பே ஹேப்பியா இருக்கு என்று சொல்கிறார்.
மாரி செல்வராஜ், அஸ்வினி அவளுடைய மேடையை அவளே உருவாக்கி, அதில் அவளே மகாராணியாய் நிற்கிறார் என்பது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு என கூறுகிறார். இதைப் பார்த்து அனைவருமே எமோஷ்னல் ஆகின்றனர்.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
