சூப்பர் சிங்கர் தொகுப்பாளர் மா கா பா ஆனந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க
மா கா பா ஆனந்த்
விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு பிரிவுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது ஜூனியர் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆம், இதுவரை நான்கு போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் வைல்டு கார்டு சுற்று நடைபெறுகிறது. இதிலிருந்து ஐந்தாவது இறுதி போட்டியாளரும் தேர்ந்தெடுக்கப்படுவார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த பல ஆண்டுகளாக மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். RJ-வாக பணிபுரிந்து வந்த மா கா பா, விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக அது இது எது நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார். இதன்பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இன்று சின்னத்திரையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
சம்பளம்
இந்த நிலையில், ஒரு எபிசோடை தொகுத்து வழங்க தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை மா கா பா சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
