சூப்பர் சிங்கர் மூலம் மாறிய போட்டியாளரின் வாழ்க்கை.. உதவிய ராகவா லாரன்ஸ்
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
மூத்த பின்னணி பாடகர்களான மனோ மற்றும் சித்ரா இருவரும் நடுவர்களாக உள்ளனர். இவர்களுடன் இசையமைப்பாளர் டி இமான் நடுவராக கலக்கிக்கொண்டு இருக்கிறார். கடந்த வாரம் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், போட்டு வைத்த காதல் திட்டம் பாடலை பாடி அசத்தியிருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலருடைய வாழ்க்கை மாறியுள்ளது.
ராகவா லாரன்ஸ் செய்த உதவி
இந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் வாழ்க்கையை தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றியமைத்துள்ள விஷயம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளர் நஸ்ரின் அம்மாவிற்கு டைலரிங் கடை வைக்க வேண்டும் என கனவு. இதை அறிந்த ராகவா லாரன்ஸ், நஸ்ரின் அம்மாவிற்கு சொந்தமாக கடை வைத்து கொடுத்துள்ளார்.
அந்த கடைக்கு நஸ்ரின் தையல் கடை என பெயர் வைத்துள்ளனர். பலருக்கும் நன்மைகளை தொடர்ந்து செய்து வரும் ராகவா லாரன்ஸின் இந்த செயலுக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
