சூப்பர் சிங்கர் பூஜாவா இது! செம குத்தாட்டம் போட்டு வெளியிட்ட வீடியோ
சூப்பர் சிங்கர் பூஜா
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி பல திறமையாளர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்துள்ளது.

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் பூஜா வெங்கட். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார்.
இவருக்காக DJ பிளாக் போடும் பாடல்கள், கவுண்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவர் பாடிய பாடல்களையும் மக்கள் ரசித்தனர்.

செம குத்தாட்டம்
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பூஜா வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் உலகளவில் புகழ் பெற்ற like JENNIE எனும் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ: