சூப்பர் சிங்கர் பிரகதியின் காதலர் யார் தெரியுமா.. இந்த பிரபலம் தானா, புகைப்படம் இதோ
பிரகதி குருப்ரசாத்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக பிரபலமானவர் பிரகதி குருப்ரசாத்.
இதன்பின் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக களமிறங்கினார். பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்துபோகும் போன்ற பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலை சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். காதலுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, "when every day feels like a dream" என கூறியிருந்தார். ஆனால், தனது காதலனின் முகத்தை காட்டவில்லை.
காதலர்
இந்த நிலையில், பிரகதி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அவருடைய காதலர் சூப்பர் சிங்கர் சாம் விஷால் என கூறி வருகிறார்கள்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாம் விஷால். ஆனால், இது உறுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.