புற்றுநோயால் மரணமடைந்த சூப்பர் சிங்கர் பாடகியின் தாய்.. இவர் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை தற்போது பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் புண்யா. இவர் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான அனுபவத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
புண்யா வாழ்க்கையில் நடந்த சோகம்
மருத்துவ படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போது என் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. மருத்துவம் எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த வேலையை தொடர்ந்து என்னால் பண்ண முடியுமா? என்ற கேள்வி இருந்தது.
அப்போது தான் என் அம்மா, நீ ஏன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். சூப்பர் சிங்கர் போறது அம்மாவின் கனவு. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
லண்டனில் இருக்கும் அம்மாவிடம் நேரம் செலவிட எனக்கு ஆசை இருந்தது. ஆனால் அம்மா நீ அங்கிருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று சீசன் முழுவதும் முடித்தப்பின் 2 நாட்களில் அம்மாவிற்கு முடியாமல் போனதால் லண்டன் சென்றுவிட்டேன்.
அங்கு சென்ற 2 மாதத்தில், அம்மா மரணமடைந்துவிட்டார். அதன்பின் என்னிடம் பலர் எங்கே சென்றுவிட்டீர்கள் என்ன ஆனது என்று கேட்டார்கள். 1 ஆண்டுகளுக்கு பின் நான் இங்கு வந்து மீண்டும் பாடத்துவங்கினேன் என கூறினார் சூப்பர் சிங்கர் புண்யா.
You May Like This Video

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

இந்தியர்கள் குறித்து விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்: மன்னிப்புக் கோர பிரதமர் வலியுறுத்தல் News Lankasri

ஐபோன் 17 அறிமுகத்திற்கு முன்பு.., iPhone 16 போனின் விலை Flipkart மற்றும் Amazon-ல் குறைப்பு News Lankasri
