சூப்பர் சிங்கர் சாம் விஷாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் தொடர்ந்து பல சீசன்களாக வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சாம் விஷால்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் டாப் 5-வில் இடத்தையும் பிடித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாம் விஷால், படங்களில் பாடும் வாய்ப்பை பெற்றார்.
அப்படி ஒன்று தான், தெலுங்கில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற சிட்டி ஸ்டோரி பாடல்.
இது தமிழில் குட்டி ஸ்டோரி என்று தளபதி விஜய்யின் குரலில் வெளிவந்தது. இந்நிலையில் சாம் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்துடன் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்ந்தும் தெரிவித்துள்ளார் சாம் விஷால். இதோ அந்த புகைப்படம்..