3 நடுவர்கள் இல்லாமல் நடந்த சூப்பர் சிங்கர் 11 சீசன், ஆனால் வேறொன்று நடந்துள்ளது... என்ன ஸ்பெஷல்
சூப்பர் சிங்கர் 11
சூப்பர் சிங்கர், பாடும் திறமை இருந்தும் தனியான மேடை கிடைக்காமல் கஷ்டப்படும் கலைஞர்களுக்காகவே சின்னத்திரையில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் வந்துள்ளன.
அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர், சீனியர்-ஜுனியர் என சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி இப்போது பெரியவர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 4 நடுவர்கள், 4 குழுக்கள் என சூப்பர் சிங்கர் Pattern இந்த 11வது சீசனில் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

புரொமோ
ஒவ்வொரு வாரமும் நல்ல நல்ல பாடல்கள் பாடி ரசிகர்களை பிடித்து வருகிறார்கள் போட்டியாளர்கள். இந்த வாரம் One & One Round, ஆனால் நடுவர்கள் கிடையாது.

அதாவது உன்னி கிருஷ்ணன், மிஷ்கின், அனுராதா என வழக்கமாக வரும் நடுவர்கள் இல்லை. இதற்கு முன் சூப்பர் சிங்கரில் போட்டி போட்ட போட்டியாளர்கள் தான் இந்த எபிசோடில் நடுவர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரவுண்டில் ஜெயிக்கும் போட்டியாளருக்கு ரூ. 3 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளதாம்.