அவர் இல்லை என கதறி அழுத சரண் ராஜா, மிஷ்கின் சொன்ன வார்த்தை... எமோஷ்னலான சூப்பர் சிங்கர் அரங்கம்
சூப்பர் சிங்கர் 11
சூப்பர் சிங்கர், விஜய் தொலைக்காட்சி என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வரும் ரியாலிட்டி ஷோ.
அந்த அளவிற்கு இந்த ஷோ மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.
ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசம் காட்டி நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள், ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சிக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.
தற்போது சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இது எந்த ஒரு சீசனிலும் இல்லாத வித்தியாசத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
அம்மா
கடந்த வாரம் இளையராஜா ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பான நிலையில் இந்த வாரம் அம்மா ஸ்பெஷல் எபிசோட் நடந்துள்ளது.
இந்த வாரத்திற்கான புரொமோவில், சரண் ராஜா பாடல் பாடி முடித்ததும் கதறி அழுதுள்ளார், அவரது அம்மா நிகழ்ச்சிக்கு வரவில்லை என தெரிகிறது.
அவர் பாடியதை கேட்டு மிஷ்கின் மிகவும் எமோஷ்னலாக பேச அரங்கமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.