சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வெங்கட் பிரபு... என்ன விஷயம் வீடியோ இதோ
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர், தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக பல சீசன்கள் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ.
விஜய் டிவியில் பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி ஒளிபரப்பாக இப்போது சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
சர்ப்ரைஸ்
இந்த வாரம் சூப்பர் சிங்கர் 11வது சீசனில் இசைஞானி இளையராஜாவின் ஸ்பெஷல் ஒளிபரப்பாகிறது.
கடந்த வாரமே இளையராஜா ஸ்பெஷல் ஆரம்பிக்க இந்த வாரமும் தொடர்கிறது.
இளையராஜா ஸ்பெஷல் நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன், விஜய் யேசுதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர் சரண் தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயத்தை கூற அரங்கில் இருந்த அனைவருமே கண் கலங்கிவிட்டனர். அதோடு சரணுக்கு வெங்கட் பிரபு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார், அவரது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
இதோ புரொமோ,