சூப்பர் சிங்கர் 11வது சீசனின் 5 Finalist யார் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் 11
சாதிக்க நினைக்கும் மக்கள் திறமைகளை காட்ட இப்போது பல மேடைகள் அமைந்துவிட்டது.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி பல வருடங்களாக ஜுனியர், சீனியர் என மாறி மாறி நடக்கிறது.
இதில் பங்குபெற்ற பல போட்டியாளர்கள் இப்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருகிறார்கள்.

பைனலிஸ்ட்
தற்போது சூப்பர் சிங்கர் 11 சீனியர்களுக்கான சீசன் நடந்து வருகிறது. வழக்கம் போல் மாகாபா ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்க மிஷ்கின், அனுராதா, உன்னி கிருஷ்ணன், தமன் ஆகியோர் நடுவர்களாக கலக்கி வருகின்றனர்.
ஆனால் தமன் சில எபிசோடுகளுக்கு பிறகு நிகழ்ச்சியில் வருவது இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
கடைசியாக நடந்து முடிந்த சில எபிசோடுகள் மூலம் மொத்தமாக 5 பைனலிஸ்ட் தேர்வாகியுள்ளனர். அவர்கள் யார் யார் என்றால் நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலினி, சரண் ஆகியோர் தான்.