பேசி வைத்து என்னை ரிஜக்ட் செய்த நடுவர்கள்.. சூப்பர் சிங்கரில் நடந்தது குறித்து யாழினி
சூப்பர் சிங்கர்
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான்.
இதில் மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருக்கிறது, அதில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். பல வருடங்களாக மக்களின் ஆதரவு கொஞ்சம் கூட குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
ஜுனியர், சீனியர் என மாறி மாறி பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் சினிமாவில் சாதனை செய்து வருகிறார்கள், நிறைய ஹிட் பாடல்கள் கொடுக்கிறார்கள்.
யாழினி பேட்டி
சூப்பர் சிங்கர் ஜுனியர் 1, 2 கலந்து கொண்டி 3வது சீசனில் பைனல் வரை வந்தவர் தான் யாழினி. கடைசியாக 9வது சீசன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார்.
அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் குழந்தையாக இருக்கும் போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன், அப்போது அந்த ஆடிஷனில் கலந்துகொண்ட போது நான் யமுனை ஆற்றிலே பாடலை பாடினேன், அப்போது நடுவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ பேசினார்கள்.
அப்போது என்னை ரிஜக்ட் செய்யப்போகிறார்கள் என நான் நினைக்க அப்படியே நடந்தது. நீ இன்னும் கத்துகிட்டு பாட்டு பாடணும் என்று சொல்லி இருந்தார்கள்.
நான் அதை கேட்டு சோகமாக வெளியே வரும்போது வீடியோ எடுப்பவர்கள் உள்ளே என்ன சொன்னார்கன் என கேட்க நான் நடுவர்கள் பேரி வச்சிட்டு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க, இனி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்.
அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
என்னுடைய கனவு ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும் என்னுடைய பாடல்கள் குறித்து பலரும் பாராட்டுகிறார்கள், ஒருசிலர் நான் குட்டையாக இருக்கிறேன் என்று கிண்டல் செய்கிறார்கள், அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது.
என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காகத்தான் நான் இப்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நான் பிரபுதேவாவின் ரசிகை; அதுக்காக இதை ஏற்க முடியாது - நடிகை சிருஷ்டி டாங்கே பகீர் புகார் IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
